search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கைது"

    • தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் பறிமுதல் செய்தனர் .

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் கிழக்கு மடத் தெருவில் வசித்து வருபவர் குமாரி (வயது 50). இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஜோசப் மற்றும் போலீசார் முத்து, பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆலத்தூர் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குமாரியை கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் 5 எண்ணிக்கை கொண்டவை பறிமுதல் செய்தனர் வழக்கு பதிவு செய்து திண்டிவனம் நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்து பின்பு சிறையில் அடைத்தனர்.

    • மோதிரத்தை திருடிய பெண் ஊழியர் தான் எங்கே போலீசில் சிக்கி விடுவோமோ? என பயந்தார்.
    • போலீசார் பெண் ஊழியரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை கக்கிவிட்டார்.

    ஐதராபாத்:

    ஐதராபாத் போஸ் ஜூப்ளி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்துக்கு முடி அலங்காரம் செய்ய பெண் வந்தார். அவரிடம் அங்கிருந்து பெண் ஊழியர் கையில் போட்டிருக்கும் வைர மோதிரத்தை கழற்றுமாறு கூறினார். உடனே பெண் வாடிக்ககையாளர் ரூ.30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான வைர மோதிரத்தை கழற்றி கொடுத்தார். அந்த மோதிரத்தை பெண் ஊழியர் வாங்கி ஒரு பெட்டியில் வைத்தார். முடி அலங்காரம் முடிந்த பிறகு அந்த பெண் வைர மோதிரத்தை மறந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதை கவனித்த பெண் ஊழியர் அந்த வைர மோதிரத்தை நைசாக எடுத்து தனது மணிபர்சில் மறைத்து வைத்தார். சிறிது நேரம் கழித்து பெண் வாடிக்கையாளர் பதற்றத்துடன் அழகு நிலையத்துக்கு வந்தார். அவர் மோதிரம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டார், ஆனால் அது பற்றி தெரியாது என அவர்கள் கூறினார்கள். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் மோதிரத்தை திருடிய பெண் ஊழியர் தான் எங்கே போலீசில் சிக்கி விடுவோமோ? என பயந்தார்.

    உடனே அவர் அழகு நிலையத்தில் இருந்த கழிவறைக்கு சென்றார்.பின்னர் திருடிய மோதிரத்தை அவர் கழிறைக்குள் வீசி விட்டு அதில் தண்ணீரை ஊற்றினார். அந்த மோதிரம் குழாய் வழியாக சென்றுவிட்டது. இருந்த போதிலும் போலீசார் பெண் ஊழியரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை கக்கிவிட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் பிளம்பர் உதவியுடன் கழிவுநீர் செல்லும் குழாயில் சிக்கி இருந்த வைர மோதிரத்தை மீட்டனர்.

    • தென்கரை பகுதியில் கடையில் மது குடிக்க அனுமதித்த பெண் கைதானார்.
    • அங்கு பதுக்கி வைக்கப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள தென்கரை பகுதியில் பீடா கடையுடன் சேர்த்து சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் முனியம்மாள் (வயது 40). இவர் கடையில், மது குடிக்க அனுமதிப்பதாக வீரகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார், அந்த கடையில் சோதனை நடத்தியதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்படடது. இது தொடர்பாக முனியம்மாளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கடத்தூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.
    • கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்க ப்பட்டிருப்பது தெரிய வந்தது.

     ஈரோடு:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் ஒரு சில மளிகை கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு சம்பந்த ப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி கடத்தூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அளுக்குளி கொள்ளுமேடு காலனி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ஹான்ஸ் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சென்று சோதனை நடத்தி னர்.

    அப்போது கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்க ப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடையில் இருந்து 10 ஆன்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • போலீசார், சுமதியின் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
    • 20 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏரியூர்,

    ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 41) என்பவர், கள்ளச் சந்தையில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்து வருவதாக பெரும்பாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பெரும்பாலை போலீசார், சுமதியின் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் 20 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுமதியை பெரும்பாலை போலீசார் கைது செய்தனர்.

    • எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பணி செய்ததாக போலி அனுபவ சான்றிதழை வித்யா சமர்ப்பித்ததாக தெரிகிறது.
    • வித்யா அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் வித்யா (வயது26). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவு அமைப்பான எஸ்.எப்.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஆகும். தற்போது காலடி சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வித்யா சமீபத்தில் பாலக்காடு அட்டப்பாடி ராஜீவ் காந்தி நினைவு கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொண்டார். அப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பணி செய்ததாக போலி அனுபவ சான்றிதழை வித்யா சமர்ப்பித்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 6-ந் தேதி வித்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு பாலக்காடு அகழி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து வித்யாவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோழிக்கோடு மேப்பயூர் அருகே தோழி வீட்டில் பதுங்கி இருந்த வித்யாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து இரவு 12.30 மணிக்கு அகழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர் நேற்று மண்ணார்காடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதனிடையே வித்யா அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    • கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
    • அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கல்லூரணி பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருச்சுழி துைண போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு திருச்சுழி அருகே உள்ள மாங்குளம் பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூனன் என்பவ ரின் மனைவி தாடக நாச்சி யார் (வயது 36) என்பவர் நின்று கொண்டிருந்தார்.அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்ததால், சந்தேகத்தின்பேரில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறி முதல் செய்தனர். மாண வர்கள் மற்றும் இளைஞர்க ளுக்கு விற்பதற்காக கஞ்சா பொட்டலங்களை அவர் வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.

    இதையடுத்து தாடக நாச்சியாரை போலீசார் கைது செய்தனர். இவர் கல்லூரணி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லாட்டரி விற்பனை செய்தற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 2 வெள்ளை துண்டு கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் வசிக்கும் வீரமணி என்பவர் பவானி போலீசாரிடம் தன்னிடம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருப்பதாக கூறி பெண் ஒருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் நானும் அந்த லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தேன்.

    ஆனால் இதுவரை எந்த பரிசும் விழவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு ஒன்று வழங்கினார்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த பவானி போலீசார் பவானி வர்ணபுரம் பகுதியில் வசிக்கும் சகுந்தலா (47) என்ற பெண் அனுமதியின்றி வெள்ளை தாளில் எண்கள் எழுதி பரிசு விழும் என நம்ப வைத்து லாட்டரி விற்பனை செய்தற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரிடம் இருந்து 2 வெள்ளை துண்டு கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிரா மத்தை சேர்ந்த பச்சை யம்மாள் (35) என்பவரை கைது செய்தபோலீசார் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது46). தொழில் அதிபர். இவரது வீட்டில் கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த ஜோதி (46) என்ற பெண் வீட்டு வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பொன்முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது இவரது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் தங்க கட்டி திருட்டு போய் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அவரது வீட்டில் தங்க கட்டியை கொள்ளையடித்து சென்றது, அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த ஜோதி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜோதியை கைது செய்து அவரிடம் இருந்து 93 கிராம் எடையுள்ள தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளர் மண்டபரம் அருகே 2 பெண்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர்.
    • ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் வடக்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கள்ளர் மண்டபரம் அருகே 2 பெண்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர். போலீசாரைக் கண்டதும் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

    மற்றொரு பெண்ணை பிடித்து விசாரித்த போது அவர் சமயன் மனைவி மல்லிகா (வயது 47) என தெரிய வந்தது. மல்லிகாவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வ ராணி என்பவரை தேடி வருகின்றனர்.

    • சொத்து வரியை வசூலிக்க ஊழியர்களும், பணியாளர்களும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று வரியை கேட்டு வசூலித்து வந்தனர்.
    • புகார் மனு மீது ஆரணி போலீசார் விசாரணை செய்து நாகலட்சுமி கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளயம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் 100 சதவீத சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளாக வீடு வீடாக சென்று சொத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    சொத்து வரியை வசூலிக்க ஊழியர்களும், பணியாளர்களும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று வரியை கேட்டு வசூலித்து வந்தனர்.

    கடந்த 19-ந்தேதி ஆரணி அத்திக்குளம் பகுதியில் வசித்து வரும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த, ஆரணி அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகலட்சுமி (வயது37) என்பவரது வீட்டில் ரூ.500 சொத்து வரியை செலுத்துமாறு பேரூராட்சி அலுவலக ஊழியர்களும், பணியாளர்களும் அவர்களிடம் நாகலட்சுமி பேரூராட்சி சார்பாக என்ன வசதியை இப்பகுதிக்கு செய்தீர்கள் என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் நாகலட்சுமி மீது ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில், புகார் மனு மீது ஆரணி போலீசார் விசாரணை செய்து நாகலட்சுமி கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலைய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மகளிர் காவலர் சுமித்ரா ஆகியோர் தலைமையில் போலீசார் நாகலட்சுமியை பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    ×